என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Affected by heart disease"

    • வேலூர் நறுவீ மருத்துவமனை கருத்தரங்கில் அலுவலர் தகவல்
    • உலக இதய தின கருத்தரங்கம் நடந்தது

    வேலூர்:

    செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம் கடைப்பிடிக்கபடுகிறது. இதையொட்டி வேலூர் நறுவீ மருத்துவமனையில் உலக இதய தின கருத்தரங்கம் 'ஒவ்வொரு இதயத்திற்கும் இதயத்தை பயன்படுத்துங்கள்' என்ற கருப்பொருளை தலைப்பாக கொண்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தலைமை வகித்தார். துணை தலைவர் அனிதா சம்பத் முன்னிலை வகித்தார். மருத்துவ சேவைகளை தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் வரவேற்றார் நிகழ்ச்சியில் பேசுகையில் பேசுகையில்:-

    மனித உடல் நலத்தில் இதயத்தின் பங்கு முக்கியமானது. மனித இழப்பை தடுக்க இதயத்தை காப்பது மிகவும் அவசியம். உலக அளவில் ஆண்டு தோரும் 18.6 மில்லியன் மனிதர்கள் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி இறக்க நேரிடுகிறது. இதய நோய் பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது புகை பிடிப்பது, கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள ;வது காரணமாக அமைகின்றன என்றார்.

    இதில் உலக இதய தினம் நோக்கம் பற்றி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் விளக்கி கூறுகையில்:-

    ஏற்படுத்த 2000-ம் ஆண்டு முதல் உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. மனித உடலில் உள்ள இதயத்தின் அளவு 450 கிராம் மட்டுமே, ஆனால் இது தான் மனிதனுடைய வாழ்க்கையை இயங்க செய்யும் முக்கிய உறுப்பாகும்.

    இந்தியாவில் 1000 பேருக்கு 275 பேர் இதய நோயால் பாதிக்கபடுகின்றனர். இதுவே மேலை நாடுகளில் அதன் அளவு 235 என உள்ளது. ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கொழுப்பு மற்றும் புகை பிடித்தல் ஆகியவை இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. உலக அளவில் நமது நாட்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இன்று இந்தியா சர்க்கரை நோயின் தலைநகராக உள்ளது. எனவே, இதயத்தை காக்க அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு, புகையை தவிர்ப்பது, இரத்த கொதிப்பை கட்டுக்குன் வைத்திருப்பது மற்றும் நாள் தோரும் குறைந்தது 30 நிமிடமாவது நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம் என்றார்.

    நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற ஹென்றி போர்டு ஹெல்த் சிஸ்டம் நிறுவனத்தின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்காட் கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசுகையில்:-

    இன்றைய மருத்துவ வளர்ச்சியில் இதய அறுவை சிகிக்சை என்பது எளிதாக மாறியிருக்கிறது. இதய அறுவை சிகிச்சையில் முப்பரிமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் அமெரிக்காவின், மிச்சிகன் ஸ்டேட் பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ஆரோன் சோஸா சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கையொட்டி நடத்தப்பட்ட இதய நோய் மருத்துவம் பற்றிய கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள வழங்கினர். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    எங்களது பல்கலைகழகமானது 5,000 பேராசிரியர்கள், 5,0000 மாணவர்கள கொண்டு உலகில் பெரிய உயர்கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது.

    மருத்துவ கல்வி வழங்குவதில் சிறப்பு பெற்ற எங்கள் பல்கலைகழகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்பதற்கும், ஆராய்ச்சிக்காகவும் வருகின்றனர்.

    எங்களது நோக்கமே குறைந்த செலவில் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்குவதே. புகை பிடித்தல் காரணமாக உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இதயம் இயங்குவதை தடை செய்கிறது. இதனால், உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது.

    எனவே, இதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு விரைவான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிப்பதன் மூலம் இறப்பை தடுக்க முடியும் என்றார்.

    ஹென்றி போர்டு ஹெல்த் சிஸ்டம் முதன்மை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அலுவலர் டாக்டர் லிசா பிரசாத், நறுவீ மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், தலைமை நிதி அலுவலர் வெங்கட், பொது மேலாளர் நித்தின் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி நன்றி கூறினார்.

    ×