என் மலர்

  நீங்கள் தேடியது "Advanced Light Helicopter"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது.

  போர்பந்தர்:

  முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.

  குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் திரு விஎஸ் பதானியா தலைமை தாங்கினார். ராணுவம் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

  இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்துள்ளது. இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

  இதில் 4 ஹெலிகாப்டர்கள் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர கண்காணிப்பு ஆகிய துறைகளில் கடலோர காவல்படை சுயசார்பை அடைந்ததை இது எடுத்துக்காட்டுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  ×