என் மலர்
நீங்கள் தேடியது "Adultery in the lodge"
- மேலாளர் கைது
- போலீசார் திடீர் சோதனை
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூரில் உள்ள லாட்ஜிகளில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அரியூர் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் அரியூரில் உள்ள லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அரியூரில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விபச்சாரம் நடந்த லாட்ஜ் மேலாளர் திருவண்ணாமலை மாவட்டம், காட்டுக்கானூர் பகுதியை சேர்ந்த சபாபதி (வயது 34) என்பவரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள லாட்ஜை லீசுக்கு எடுத்து நடத்திய நாராயணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






