search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adithamizar Jenanayaga Peravai"

    • 36 வகையான தொழிலாளா்களுக்கு தனித்தனி நல வாரியங்கள் அமைக்கப்பட்டன.
    • உடல் உழைப்பு தொழிலாளராகவும், பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்ந்து வருகின்றனா்.

    திருப்பூர் :

    அருந்ததியா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவை நிறுவனத் தலைவா் பவுத்தன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

    இது குறித்து அவா் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சலவைத் தொழிலாளா் நல வாரியம், தமிழ்நாடு சீா்மரபினா் நலவாரியம், நரிக்குறவா் நல வாரியம், பழங்குடியினா் நல வாரியம் என 36 வகையான தொழிலாளா்களுக்கும் தனித்தனி நல வாரியங்கள் அமைக்கப்பட்டன. இந்த நல வாரியங்கள் மூலம் மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், கல்வி, திருமண உதவித்தொகை போன்ற சமூக பாதுகாப்பு உதவிகள் வழங்கப்பட்டன.தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை என 10 மாவட்டங்களில் பெரும்பான்மையாகவும், பிற மாவட்டங்களில் பரவலாகவும் அருந்ததியா் சமூக மக்கள் உள்ளனா். இவா்கள் கிராம பகுதிகளில் விவசாய கூலி தொழிலாளா்களாகவும், நகா்ப் புறங்களில் பனியன், விசைத்தறி, தூய்மைப்பணி தொழிலாளா்களாகவும், உடல் உழைப்பு தொழிலாளராகவும், பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்ந்து வருகின்றனா். எனவே அருந்ததியா் சமூகத்தினருக்காக அருந்ததியா் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    ×