search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional trains"

    • பள்ளிகள் முழு ஆண்டு தேர்வு இன்னும் சில நாட்கள் நிறைவடைய உள்ளது. பின்னர் கோடை விடுமுறை துவங்கிவிடும்.
    • கூடுதல் ெரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    கோடை விடுமுறை துவங்க உள்ளதை ஒட்டி உடுமலை வழியாக கூடுதல் ெரயில்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில் நிலையம் உள்ளது.இந்த வழித்தடம் அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் தற்போது குறைந்த அளவிலான ெரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.கோவை- மதுரை பாலக்காடு- திருச்செந்தூர் பாலக்காடு -சென்னை, திருவனந்தபுரம்- மதுரை ஆகிய ெரயில்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலைப் பகுதியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிற்சாலை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் சொந்த ஊருக்கு ெரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர் ஆனால் அவர்கள் செல்ல போதுமான ெரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை .ஆனால் அவர்கள் அதிக செலவு செய்து பஸ்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது .பள்ளிகள் முழு ஆண்டு தேர்வு இன்னும் சில நாட்கள் நிறைவடைய உள்ளது. பின்னர் கோடை விடுமுறை துவங்கிவிடும்.

    மாணவர்கள், பொதுமக்கள் சுற்றுலா செல்ல விரும்புவர் .அவர்கள் தற்போது இயக்கப்படும் ெரயில்களில் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே பொதுமக்கள் ,வெளி மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில் கோவை -திண்டுக்கல் வழித்தடத்தில் கூடுதல் ெரயில்கள் இயக்கத்துக்கு ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக ெரயில்வேக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் . பொதுமக்களும் அதிக அளவில் பயன்பெறுவர். எனவே கூடுதல் ெரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×