என் மலர்
நீங்கள் தேடியது "Actress Shakila Sami Darshanam"
- ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்
- ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ- கஸ்பா பகுதியில் பெரிய ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் சனிபகவானை காலில் மிதித்தபடி காட்சி அளிக்கிறார். இங்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.
இதனால் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிரபல நடிகை ஷகிலா தனது குடும்பத்துடன் வந்து சாமிதரிசனம் செய்தார்.
மேலும் விளக்கேற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நடிகை ஷகிலாவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.






