என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Sri"

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

    அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியான சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது

    "நடிகர் ஸ்ரீ தற்பொழுது நலமாக சந்தோஷமாக இருக்கிறார். ஒரு நாள் எனக்கு வீடியோ கால் செய்து அவன் எழுதிய புத்தகத்தை வெளியிட போகிறேன் என கூறினான். நானும் எஸ்.ஆர் பிரபுவும் ஸ்ரீயை கவனிக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் நிறைய குற்றச்சாட்டு எழும்பியது. இதனால் தான் நான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினேன்." என கூறியுள்ளார்.

    • ஸ்ரீயின் உடல் நிலை குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
    • ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீ. இவர் கடைசியாக நடித்த 'இறுகப்பற்று' படமும் வரவேற்பை பெற்றது.

    இதன்பின், நடிகர் ஸ்ரீ நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நடிகர் ஸ்ரீ உடல் எடை மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஸ்ரீக்கு என்ன ஆனது, அவருக்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

    அந்த அறிக்கையில், நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், அது அவரது மனநிலையை பாதிக்கக்கூடும்.

    ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

    • விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஸ்ரீ
    • லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஸ்ரீ அதைதொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

    பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

    அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அங்கீகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மிகவும் அழகாகவும் மிடுக்காகவும் தோற்றத்தில் ஒரு துடிப்பான இளைஞன் தோற்றத்தில் இருந்த ஸ்ரீ தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் அளவுக்கு அவரது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. தலைமுடி நீளமாக வளர்த்துக் கொண்டு, உடல் எடை மிகவும் குறைத்து காணப்படுகிறார்.

     

    உண்மையில் இது நடிகர் ஸ்ரீதானா? என்ற கேள்வி எழுகிறது. இந்த புகைப்படத்தை மக்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இல்லை இது  ஸ்ரீயின் தோற்றத்தை போல் இருக்கும் வேறொருவரின் புகைப்படமாக இருக்கும் என சந்தேகமும் எழுகிறது. இதுக்குறித்து நடிகர் ஸ்ரீ விளக்கம் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பலரும் இந்த புகைப்படத்தின் கீழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜை டேக் செய்து நடிகர் ஸ்ரீக்கு உதவி செய்யுமாறு பதிவு செய்து வருகின்றனர்.

    ×