search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Acharapakkam Atcheeshwarar"

    • தண்ணீருக்குள் தான் அந்த விநாயகர் இருக்கிறார்.
    • மூலவர் ஆட்சீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தி.

    ஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோவில் கருவறை ஒரு கிணற்றின் மீது அமைந்துள்ளது.

    தண்ணீருக்குள் தான் அந்த விநாயகர் இருக்கிறார்.

    கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் உள்ள விராலிமலை சித்தர் ஆலயத்திலும் கருவறை முன்பு பெரிய கிணறு உள்ளது.

    நோய் தீர்க்கும் தீர்த்தம் கொண்ட கிணறாக அது உள்ளது.

    அச்சரப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர் ஆலயத்திலும் கருவறை முன்பு கிணறு உள்ளது.

    மூலவர் ஆட்சீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தி.

    தாழ அமைந்த சதுரமான ஆவுடையார் பெருமானுக்கு முன்பு நாம் நின்று வழிபடும் இடத்தில் கீழே கிணறு உள்ளதாம்.

    கருங்கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது.

    மழைக்காலத்தில் கற்களின் இடுக்கு வழியாக பார்த்தால் நீர் இருப்பது நன்கு தெரியுமாம்.

    சிறப்பு பூஜை நாட்களில் பக்தர்களை அதன் மீதுதான் அமர வைக்கிறார்கள்.

    • அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.
    • இங்கு வழிபாடு செய்பவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.

    அச்சரபாக்கம் தலத்தில் சர்வேஸ்வரன் அட்சரம் என்ற எழுத்தின் வடிவமாக இருப்பதால் இங்கு வழிபாடு செய்யும் அன்பர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.

    அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.

    மேலும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்வதால் அரசுப் பணிபுரிய வாய்ப்பும் ஆளுமைத் திறனும், பதவி உயர்வும் கிடைக்கும்.

    ஏழ்மையினாலோ அல்லது வீண் பழியினாலோ உற்றார் உறவினர்களாலும், நண்பர்களாலும் சிறுமைப்படுத்தப்படும் துர்பாக்கியம் ஏற்பட்டால், அதற்கு உடனடியாகப் பரிகாரமளிக்கும் திருத்தலம்.

    கடன் தொல்லைகள் அல்லது தவறான நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதால் அவப்பெயர் ஏற்பட்டு மனதில் எப்பொழுது பார்த்தாலும், பிறரால் என்ன ஏற்படுமோ என்ற நிலை ஏற்படும் போது, வியக்கத்தக்க வகையில் அந்த அச்சத்தை போக்கும்.

    இத்தகைய அரிய சக்திக்குக் காரணம், கருவறையில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு அடியில் சில ரகசிய அதர்வண வேத யந்திரங்கள், பிரத்யேகமாக இத்தகைய தோஷங்களைப் போக்குவதற்கென்றே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதே ஆகும்.

    • ஆலயங்களில் பிரதட்சனம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன.
    • கார்த்திகை மாத 31 நாட்களுக்குள் 1008 சுற்றுகளையும் பக்தர்கள் முடித்து விடுவார்கள்.

    ஆலயங்களில் பிரதட்சனம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன.

    அவற்றை தெரிந்து கொண்டு பிரதட்சனம் செய்தால் அளவில்லாத பலன்களை பெற முடியும்.

    அந்த வகையில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடக்கும் "தலவிருட்ச பிரதட்சனம்" மிகவும் புகழ் பெற்றது.

    இங்குள்ள தல விருட்சத்தை 1008 தடவை சுற்றுவதாக வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும்.

    இந்த பிரதட்சனம் கார்த்திகை மாதம் நடைபெறும்.

    பக்தர்கள் கார்த்திகை 1ந்தேதி தொடங்கி 31ந்தேதி வரை 1008 பிரதட்சனத்தை மேற்கொள்வார்கள்.

    ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த பிரதட்சனம் நடைபெறும்.

    கார்த்திகை மாத 31 நாட்களுக்குள் 1008 சுற்றுகளையும் பக்தர்கள் முடித்து விடுவார்கள்.

    சமீப ஆண்டுகளாக இந்த வழிபாடு மிகவும் புகழ் பெற்றுள்ளது.

    • சில அபூர்வங்கள் மட்டும் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்று கொன்றையடி சேவையாகும்.
    • இந்த அதிசயம் ஒவ்வொரு ஆண்டும் கொன்றையடி சேவையின்போது நடந்து வருகிறது.

    அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் எத்தனையோ விசேஷங்களையும், வித்தியாசங்களையும் உள்ளடக்கியது.

    நிறைய அபூர்வ தகவல்கள் இந்த தலத்தில் இருந்து மறைந்து போய் விட்டன.

    சில அபூர்வங்கள் மட்டும் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்று கொன்றையடி சேவையாகும்.

    சித்திரை மாதம் இந்த கொன்றையடி சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆலயத்தை கட்டிய திரிநேந்திர முனிவரிடம் சிவபெருமான் காட்சி கொடுத்து, "எமக்கு ஆலயம் எழுப்பிய உமக்கு என்ன வரம் வேண்டும் கேளும்" என்று கேட்டார்.

    அதற்கு அந்த முனிவர், "திரிபுரத்தை சம்காரம் சென்ற போது நீங்கள் ரதம் ஏறி சென்றீர்கள்.

    திரிபுரத்தை எரித்து விட்டு நீங்கள் ரதத்தில் இருந்து இறங்கும் காட்சி கண்கொள்ளா காட்சி.

    அப்படி நீங்கள் ரதம் இறங்கி செல்லும் காட்சியை எனக்கு காண்பிக்க வேண்டும்" என்றார்.

    அதை ஏற்றுக் கொண்டு சிவபெருமான் முனிவருக்காக ரதத்தில் வந்து இறங்குவது போன்று காட்சி கொடுத்து அருளினார்.

    அதை பிரதிபலிப்பது போல இந்த ஆலயத்தில் சித்திரை பிரமோற்சவத்தின் போது 7வது நாள் முனிவருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பொதுவாக கொன்றை மரங்கள் தை மாதம் முடிந்து மாசியில் பூக்க தொடங்கும்.

    ஆனால் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்குள் இருக்கும் கொன்றை மரம் மாசி மாதம் பூக்காது.

    சித்திரை மாதம் பிரமோற்சவம் நடக்கும் நாளில் மட்டுமே பூக்கும்.

    இந்த அதிசயம் ஒவ்வொரு ஆண்டும் கொன்றையடி சேவையின்போது அற்புதமான ஒன்றாக நடந்து வருகிறது.

    வேறு எந்த சிவாலயத்திலும் இந்த அற்புதத்தை காண முடியாது.

    • இந்த தலத்தில் உமையாட்சீஸ்வரர் சன்னதியில் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள்.
    • இந்த வழிபாடு மூலம் மூன்றே மாதத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

    அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் திருமணம் கைகூட செய்யும் சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    இந்த தலத்தில் உமையாட்சீஸ்வரர் சன்னதியில் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள்.

    இது அகத்தியருக்கு சிவபெருமான் காட்டிய திருமண கோலமாக கருதப்படுகிறது.

    திருமணம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சன்னதிக்கு வந்து மலர் மாலை அணிவித்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    சுவாமிக்கும், அம்பாளுக்கும் வேஷ்டி புடவை சாத்தி வழிபாடு செய்வது நல்லது.

    யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது நட்சத்திர தினத்தன்று இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

    வழிபாட்டுக்கு வரும் போது 3 மாலைகளை வாங்கி வர வேண்டும்.

    கோவில் அர்ச்சகர் சொல்வதற்கு ஏற்ப அந்த மாலைகளை பயன்படுத்தி வழிபாடுகள் செய்யப்பட வேண்டும்.

    அதன்பிறகு திருமண வயதில் இருப்பவர் தங்களுக்கு எத்தனை வயதாகிறதோ அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

    சுவாமிக்கு கல்கண்டு, முந்திரி, திராட்சை ஆகியவை வாங்கி வந்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    பிறகு அதை அங்குள்ள பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம்.

    இந்த வழிபாடு மூலம் மூன்றே மாதத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

    ×