search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abijith Gotani"

    • அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற அபிஜித்தின் கனவை நிறைவேற்றினார்.
    • பிரதமர் மோடியின் வாழ்க்கைப் பயணத்தை சிறப்பிக்கும் ஓவியம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    அசாம் மாநிலம் சில்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஜித் கோதானி (28). காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவர் ஓவியக்கலைஞர் ஆவார்.

    இவரது ஓவியத் திறனை கண்டு வியந்த அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டும் என்ற அபிஜித்தின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளார்.

    இந்நிலையில், அபிஜித் கோதானி அவரது தாயாருடன் இன்று டெல்லி வந்து பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் வாழ்க்கைப் பயணத்தை சிறப்பிக்கும் ஓவியம் ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த ஓவியத்தில் பிரதமர் தனது தாயுடன் இருப்பது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் பேசுவது, பிரதமரின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் பிற சிறந்த பயணத்தை சித்தரிக்கும் படங்களை அவர் வரைந்திருந்தார்.

    இதுதொடர்பாக அபிஜித் சைகை மொழியில் கூறுகையில், பிரதமர் என் ஓவியத்தைப் பாராட்டியதும், அது மிகவும் அழகாக இருக்கிறது என்று விவரித்ததும் நான் நெகிழ்ந்து போனேன். எனது கலைப்படைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என பிரதமர் பாராட்டினார். இன்று என் கனவு நிறைவேறிவிட்டது என தெரிவித்தார்.

    ×