என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A TRADER"

    • வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • கத்தியை காட்டி மிரட்டினர்

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது55). இவர் பழைய இரும்புகளை வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று காஜா பேட்டை பிரதான சாலையில் உள்ள ஈஸ்வரி உணவகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பீமா நகர் கூனி பஜார் பகுதியை சேர்ந்த பாண்டி (24) மற்றும் சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் தொகுதி சேர்ந்த எலி என்கிற திருநாவுக்கரசு (22) இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அண்ணாதுரை இடமிருந்து பணம் பறித்துச் சென்றுள்ளனர்.இது குறித்து அண்ணாதுரை பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    ×