என் மலர்
நீங்கள் தேடியது "A total of 976 idols were installed"
- ஊர்வல பாதை 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது
- 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள், பொது மக்கள் மற்றும் தனி நபர்கள் என மொத்தம் 976 சிலைகள் நிறுவப்பட்டன.
வேலூர் மாநகரப் பகுதியில் ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நேற்று கொண்டு சென்று கரைத்தனர்.
3-வது நாளான நேற்று வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன.
இதனையொட்டி பாதுகாப்பு பணியில் மாவட்டத்தில் மொத்தம் 1500 போலீஸ் மற்றும் கூடுதலாக 261 பயிற்சி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடவாமல் தடுக்கவும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் 3 ட்ரோன் மேராக்கள் மூலம் கண்காணித்தனர்.
விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக சதுப்பேரி ஏரியில் கிரேன் வசதி, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை பொதுமக்கள் அங்கு கொண்டு சென்று கரைத்தனர். நள்ளிரவு 1.30 மணிவரை சிலைகள் கரைக்கபட்டன.






