என் மலர்

  நீங்கள் தேடியது "A tiger found dead"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
  • இறந்து கிடந்த புலி 2 வயதுடைய ஆண் புலியாகும்.

  ஊட்டி,

  கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியில் உள்ள அம்புகுத்தி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் புலி இறந்து கிடப்பதாக வயநாடு மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

  இதைத் தொடா்ந்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு கழுத்தில் கம்பி மாட்டிய நிலையில் புலியின் சடலம் கிடந்தது.

  அந்த புலியை வனத்துறையினர் பரிசோதித்தனர். அப்போது இறந்து கிடந்த புலி 2 வயதுடைய ஆண் புலி என்றும், வேறு ஏதோ பகுதியில் கழுத்தில் வயா் சிக்கிய நிலையில் இங்கு வந்து இறந்துள்ளது எனவும் தெரிவித்தனா். இது தொடா்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

  ×