என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A snake entered the school and office"

    • தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்தனர். அப்போது, அலுவலக அறையில் விஷமுள்ள பாம்பு ஒன்று இருந்ததை ஆசிரியர்கள் கண்டு திடுக்கிட்டனர்.

    பிறகு, பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் பீரோவுக்கு அடியில் பதுங்கிய பாம்பை பிடித்து, வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

    அதேபோல, வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை பணிக்கு வந்தனர். அப்போது, தொழிற்சாலை பின்புறம் சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கு 15 அடி நீளமுள்ள 3 மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    ×