என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A slogan for the arrest of Arjunsambhat"

    • போக்குவரத்து பாதிப்பு
    • 50 பேர் கைது

    வேலூர்:

    அம்பேத்கர், பெரியார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இழிவுபடுத்தி பேசி வருவதாக கூறி விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியினர் வேலூர் ராஜா திரையரங்கம் அருகே அண்ணாசாலையில் திடீரென இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அர்ஜூன்சம்பத்தை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாவட்டத் துணைச் செயலாளர் இளங்கோ, பொருளாளர் சச்சின் குமார், தொகுதி செயலாளர்கள் கோட்டி என்ற கோவேந்தன் வையாபுரி, விமல் உட்பட சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×