என் மலர்
நீங்கள் தேடியது "A sheep log"
- 160 கிலோ எடை கொண்ட 8 கட்டைகள் சிக்கியது
- மர்ம கும்பலை தேடி வருகின்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் பழைய அஞ்சல் வீதியில், ஏரிக்கரை அருகே வசிப்பவர் ரமணன். இவர் வீட்டின் அருகே யாரோ மர்ம கும்பல் செம்மர கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனச்சரக அதிகாரி சரவணன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 160 கிலோ எடை கொண்ட 8 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் வழக்கு பதிந்து செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.3லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






