என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A poverty-free livelihood"

    • நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா, திட்டக்குழு தலைவர் ப்ரிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பான நிர்வாகம் நடைபெறும் கிராம ஊராட்சி, வளர்ச்சியில் பாலின சமத்துவ ஊராட்சி உள்பட 9 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா, திட்டக்குழு தலைவர் ப்ரிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ராஜபாண்டியன், நாராயண பாண்டியன், பாண்டியன், வளர்மதி, தமயந்தி, தங்கராஜ், தினகரன், நயினார் முகமது, பவானி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலகில் வாழும் ஒட்டு மொத்த மனித குலமும் செழிப்பு, அமைதி, மற்றும் நட்புறவுடன் வாழ்ந்து, நாம் வாழும் பூமியை பாதுகாத்து நம்முடைய சந்ததியினர் சீரும் சிறப்பாக வாழும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி, நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை உள்ளடக்கிய 9 கருப்பொருட்களை 2030-ஆம் ஆண்டுக்குள் இலக்கினை அடைவதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் நடைபெற்ற கூட்டத்தில், கருப்பொருட்களாக வறுமை இல்லாத வாழ்வாதாரம் நிறைந்த கிராம ஊராட்சி, நல வாழ்வு கிராம ஊராட்சி, குழந்தைகளின் நலன் கொண்ட கிராம ஊராட்சி, குடிநீரில் தன்னிறைவு அடைவது, சுத்தமான, பசுமையான கிராம ஊராட்சி, உட்கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி, சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு நிறைந்த கிராம ஊராட்சி, சிறப்பான நிர்வாகம் நடைபெறும் கிராம ஊராட்சி, வளர்ச்சியில் பாலின சமத்துவ ஊராட்சி ஆகிய 9 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.

    குறிப்பாக, சுகாதாரம், தொற்றுநோய், ரத்த சோகை, தடுப்பூசி, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பெண் குழந்தைகள் கல்வி, மகளிர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்ளவும், நீர் பாதுகாப்பு மேலாண்மை, தரிசு நில மேம்பாடு, சாலை வசதி, சமூக நீதி, தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணிகளை விரைந்து முடிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரகாஷ், மாவட்ட ஊராட்சி செயலாளர் / திட்ட அலுவலர் சிவகுமார், உதவி இயக்குநர் அண்ணாதுரை மற்றும் நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×