என் மலர்
நீங்கள் தேடியது "A piece of rubber on a wine bottle"
- காங்கயம் ரோடு நல்லூர் காவல் நிலையம் எதிரில் உள்ள மது பானக்கடைக்கு சென்றோம்.
- டாஸ்மாக் ஊழியரிடம் தெரிவித்த போது சரியாக பதில் கூறாமல் அலட்சியப்படுத்தினர்.
திருப்பூர் :
திருப்பூர் எம். எஸ். நகர் 2வது வீதியை சேர்ந்தவர்கள் குரு கணேஷ், ஜெய்சன். இவர்கள் 2 பேரும் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மது பாட்டிலுடன் வந்தனர். பின்னர் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் எங்களது நண்பர்களுடன் காங்கயம் ரோடு நல்லூர் காவல் நிலையம் எதிரில் உள்ள மதுபானக்கடைக்கு சென்றோம். மதுபானம் ஒன்று வாங்கினோம். எம் ஆர்.பி., ரேட்டை விடவும் 10 ரூபாய் கூடுதலாகப் பெற்றுக்கொண்டு மதுபானம் தந்தனர். பாட்டிலை வாங்கி பார்த்த போது அதில் ரப்பர் துண்டு ஒன்று இருந்ததை கண்டோம். இது பற்றி டாஸ்மாக் ஊழியரிடம் தெரிவித்த போது சரியாக பதில் கூறாமல் அலட்சியப்படுத்தினர். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.