என் மலர்
நீங்கள் தேடியது "A person standing suspiciously"
- 1 கிலோ 250 கிராம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு அருகே மேல்விஷாரம் புளியமரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






