search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A gang that hunts and sells wildlife"

    • 9 பேர் கைது
    • ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம்

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை வன சரகத்திற்கு உட்பட்ட பாலியப்பட்டு கிராமத்தில் கவுரி காப்புக்காட்டில் வன விலங்குகள் வேட்டை யாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விலங்குகள் வேட்டை அதைதொடர்ந்து வனசரக அலுவலர் சீனிவாசன் தலைமை யிலான அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த வனவிலங்குளை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலையும், கஞ்சா அடித்து விட்டு போதையில் கறி வாங்கி சென்று கறியை சமைத்து சாப்பிடும் கும்பலையும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    9 பேர் கைது இதில் பெரிய பாலியப்பட்டு பகுதியை சோர்ந்தவர் அண்ணாமலை, பச்சையப்பன், ரஞ்சித், மோகன்ராஜ், வெற்றி, அரிகிருஷ்ணன், மூலக்காடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தட்சணாமூர்த்தி, சுதாகர் ஆகிய 9 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    அவர்களிடம் 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, நெற்றி பேட்டரி டார்ச் லைட், வெடி மருந்து, முயல், உடும்பு, வேட்டையாட பயன்படுத்தும் வலைகள், கம்பி வலைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

    ×