என் மலர்
நீங்கள் தேடியது "A boy who married a student"
- பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இருவீட்டார் சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.
- அப்போது ஊர்நல அலுவலர் விசாரணை நடத்தியதில் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தது உறுதியானது.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டி பட்டி தாலுகா மூலக்க டையை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம்(25). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாழையூத்து பகுதி யில் வசிக்கும் தனது அக்கா மகளான ராஜேஸ்வரி(17) என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இருவீட்டார் சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.
5 மாத கர்ப்பிணியான ராஜேஸ்வரி ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது ஊர்நல அலுவலர் வாசுகி அவரிடம் விசாரணை நடத்தியதில் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தது உறுதியானது. இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசில் வாசுகி புகார் அளித்தார்.
அதன்பேரில் பாணடி ச்செல்வத்தை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் திருமணம் செய்து வைத்த அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






