என் மலர்
நீங்கள் தேடியது "A billboard was scraped against a power line"
- விளம்பர பலகை மாட்டியபோது பரிதாபம்
- பெங்களூருவை சேர்ந்தவர்கள்
வேலூர்:
கர்நாடக மாநிலம் ெங்களூரு டேனி ரோட்டை சேர்ந்தவர்கள் சலீம் (வயது 22). கவுஷிக் (25). இவர்கள் இருவரும் பிரபல தனியார் ஆயில் நிறுவனத்தின் விளம்பர பலகை பொருத்துவது சம்பந்தமாக டெண்டர் எடுத்து வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் ராணிப்பேட்டை ஆற்காடு வேலூர் உள்ளிட்ட இடங்களில் ஆயில் விற்பனை செய்யும் கடைகளில் மாட்டப்பட்டு இருந்த பழைய விளம்பர பலகைகளை அகற்றிவிட்டு புதிய விளம்பர பலகைகளை பொருத்தினர்.
ஊசூரை சேர்ந்த சரவணன் என்பவர் குளத்து மேடு பகுதியில் ஆயில் மற்றும் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சலீம், கவுஷிக் இருவரும் சென்றனர்.
அப்போது கடையின் உரிமையாளர் சென்னைக்கு சென்று இருந்தார்.இதையடுத்து 3-வது மாடிக்குச் சென்ற இருவரும் அங்கு புதிய விளம்பர பலகையை பொருத்தம் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின்சார கம்பியில் விளம்பரப் பலகை உரசியது.
இதில் 2 வாலிபர்கள் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






