என் மலர்

  நீங்கள் தேடியது "9 death"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். #Ninekilled #Somalimarket #carbombing #Somalibombing
  மொகடிஷு:

  அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அந்நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.

  இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

  மொகடிஷு மால் அருகே நிகழ்ந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் அப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் பலத்த சேதமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Ninekilled #Somalimarket #carbombing #Somalibombing
  ×