என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "71"

    தென் அமெரிக்கா கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள பெரு - பிரேசில் நாடுகளின் எல்லையில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake
    லிமா:

    பெரு மற்றும் பிரேசில் நாடுகளின் எல்லையில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கடியில் சுமார் 609 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் சுமார் 7.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென் அமெரிக்கா கண்டத்தில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள பெரு உள்ளிட்ட நாடுகள் அடிக்கடி நிலநடுக்கத்துக்கு இலக்காகி வரும் நிலையில், இன்று ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அவர்கள் தங்களது வீடுகளை விட்டு கூச்சலிட்டபடி ஓடிச்சென்று தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. #Earthquake
    ×