என் மலர்
நீங்கள் தேடியது "52 places in Vellore police check"
- மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் பறிமுதல்
- நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் வழக்கம்போல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
ஆந்திர எல்லையில் 6 சோதனை சாவடி
வேலூர் மாநகரப் பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிட ப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திர எல்லையில் உள்ள 6 சோதனை சாவடிகள் மற்றும் பிள்ளையார்குப்பம் கணியம்பாடி மாதனூர் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் கேமரா பொருத்திய வாகனங்களுடன் போலீசார் சோதனை நடத்த உள்ளனர்.
இது மட்டுமின்றி வேலூர் மாநகர் மற்றும் காட்பாடி குடியாத்தம் பேரணாம்பட்டு அணைக்கட்டு ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 52 இடங்களில் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பைக் ரேஸ்
வேலூர் மாநகரப் பகுதியில் உள்ள ஓட்டல் லாட்ஜ் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கிறது. இந்த கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அனைத்து இடங்களிலும் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடை விதித்துள்ளனர். மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டினால் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் புத்தாண்டில் பைக் ரேஸ் நடத்துபவர்கள் தீவிரமாக கண்காணி க்கப்படுகின்றனர். பைக் ரேஸ் செல்பவர்களை விரட்டிச் சென்று பிடிக்காமல் அவர்களை அடுத்த பகுதியில் உள்ள சிக்னல்களில் மடக்கி பிடிப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
போலீசார் எந்த காரணத்தைக் கொண்டும் பைக் ரேஸ் செல்பவர்களை துரத்தி பிடிக்க வேண்டாம் அடுத்த சிக்னலில் உள்ள போலீசார் உதவியுடன் பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சி பகுதி சாலைகள் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அதிரடி படை போலீசார் ஊர்க்காவல் படை என மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாட வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.






