search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "500 people allowed"

    • பழனி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாள் முழுவதும் அன்னதான திட்டம் அடிவாரம் கிரிவீதியில் 3 இடங்களில் நடைபெறும்.

    பழனி:

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது,

    பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய அனுமதி பெற்ற பக்தர்கள் 39 இடங்களில் தனித்தனியாக அனுமதிக்கப்படுவார்கள். தலா 500 பக்தர்கள் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.

    மற்ற பக்தர்கள் யானைப்பாதை வழியாக மலைக்கோவில் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாள் முழுவதும் அன்னதான திட்டம் அடிவாரம் கிரிவீதியில் 3 இடங்களில் நடைபெறும். மலைக்கோவில் அடிவாரம் முதல் பஸ்நிலையம் வரை 10 எல்.இ.டி திரைகள், 16 டி.வி திரைகள் வைக்கப்படும். கண்காணிப்பு காமிரா எச்சரிக்கை, வழிகாட்டும் பலகைகள் அதிகளவில் வைக்கப்பட உள்ளது.

    பஸ்கள் புறநகர் பகுதியிலும், அங்கிருந்து பக்தர்கள் பஸ்ஸ்டாண்டு பகுதிக்கு வந்து செல்ல இலவச அரசு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் விசாகன், ஐ.ஜி.அஷ்ராகார்க், டி.ஜ.ஜி அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×