search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "400 feet"

    • 1,400 அடி உயரத்தில் உள்ள வெள்ளிமலையில் இன்று மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    • பனை ஓலைகளை வைத்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடை பெறுகிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அழ கர்கோவில் மலை மேலுள்ள முருகப்பெருமானின் ஆறா வது படைவீடான சோலை மலை முருகன் கோவிலில் கார்த்திகை மாத தீபத்திரு விழா இன்று நடைபெறு கிறது. இதையொட்டி இன்று காலையில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபார தனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து கோவில் முன்பாக பனை ஓலைகளை வைத்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

    இதற்காக பனை ஓலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக சுமார் 7 அடி உயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடை பெற உள்ளது. இதேபோல கள்ளழகர் திருக்கோவில் ராஜகோபுரம் முன்பாக பனை ஓலையில் குடில் அமைத்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடை பெற உள்ளது.

    அழகர்கோவில், ஏழும லைகளில் கிட்டத்தட்ட 1,400 அடி உயரமுள்ள, வெள்ளி மலையில் கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்ற கொப்பரையில் திரி ஏற்றி தயார் நிலையில் உள்ளது. விழா குழுவினர் சுமார் 300 கிலோ நெய்யை தலைச் சுமையாக எடுத்துச் சென்று சரியாக மாலை 6 மணி அள வில் வெள்ளி மலையில் தீபத் திருவிழா நடைபெறுகி றது.

    முன்னதாக கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அழகர்கோவில், ராக்காயி அம்மன் கோவிலில் அதிக அளவிலான அய்யப்ப, முருக பக்தர்கள் வருகை தந்து நூபுர கங்கை தீர்த் தத்தில் புனித நீராடி சுவா மிக்கு மாலை அணிவித்து சென்றனர்.

    கார்த்திகை தீப திருநா ளையொட்டி அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கா ரம் நடைபெற்றது. இதற் கான ஏற்பாடுகளை அறங் காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான ராமசாமி மற்றும் அறங்காவ லர் குழுவினர், கோவில் பணியாளர்கள் செய்திருந்த னர்.

    ×