என் மலர்

  நீங்கள் தேடியது "40 CRORE ALLOCATION"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய பேருந்து நிலையம் கட்ட முதற்கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மேயர் தெரிவித்தார்.
  • புத்தக கண்காட்சி நிறைவடைந்ததும் பணிகள் தொடங்கும்

  கரூர்:

  கரூர் மாநகராட்சி அவசரம் மற்றும் சாதாரண கூட்டம் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் தாரணிசரவணன், ஆணையர் என்.ரவிச்சந்திரன், பொறியாளர் நக்கீரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  இந்த கூட்டத்தில் 102 தீருமானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் மாமன்ற அதிமுக உறுப்பினர் சுரேஷ் பேசிய போது, எஸ்.வெள்ளாளப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நடப்பாணடு அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியும் சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை. இதனால் கதவு இல்லாமல் பராமரிப்பின்றி காணப்படும் கழிப்பறை, மூடப்படாத செப்டிக் டேங்க் போன்றவற்றால் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றார்.

  இதற்கு பதிலளித்த மாநகராட்சி பொறியாளர் நக்கீரன், அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதே போன்று மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பல கேள்விகளுக்கு, மேயர் பதலளித்தார்.

  கூட்டத்திற்கு பின்னர் மேயர் கவிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கரூரில் 25 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலைய கோரிக்கை உள்ளது. 10 ஆண்டு சட்டப்போராட்டங்களுக்கு பிறகு கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் ரூ.62 கோடியில் அமைய உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைவதற்கு எதிராக எவ்வித வழக்குகளும் இல்லை. புத்தகக்கண்காட்சி முடிவடைந்ததும். பணிகள் தொடங்கும் என்றார்.

  ×