என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 more people arrested"

    • திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவரை கூட்டாளிகள் வெட்டி படுகொலை செய்தனர்.
    • அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கொலைக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்ததாக தகவல் கிடைத்தது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது48). இவர் சுள்ளான் ரமேஷ் என்பவரது கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு இருந்ததால் ரமேசின் கூட்டாளிகள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் கார்த்திக், சிவா, கணேசசபரி, மாணிக்கம், சதீஷ், சார்புதீன் ஆகியோர் சரண் அடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலைக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்ததாக திண்டுக்கல்லை சேர்ந்த அய்யனார் (26), ராம்குமார் (22), பிரசாத் (30), முத்துக்காமாட்சி (22) ஆகிய 4 பேரையும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நல்லக்கண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×