search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3D-print"

    • கட்டுமான வேலைகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டது
    • தொழில்நுட்ப ஆலோசனைகளை சென்னை ஐஐடி வழங்கியது

    கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் இன்று இந்தியாவின் முதல் முப்பரிமாணத்தில் (3D) அச்சிடப்பட்ட கட்டுமான தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட தபால் நிலையத்தை ரெயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் மென்பொருள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.

    இந்த தபால் நிலையம் பெங்களூரூவில் உள்ள கேம்பிரிட்ஜ் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. 1021 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த தபால் நிலையம் இன்றிலிருந்தே மக்களுக்கு சேவையை தொடங்குகிறது.

    இந்த தபால் அலுவலக கட்டிடத்தின் கட்டுமானம், பிரபல கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அனைத்தும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் சென்னை கிளையை சேர்ந்த வல்லுனர்களால் வழங்கப்பட்டதாகவும் அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "இந்த புதிய கட்டுமான தொழில்நுட்பம், 3டி கான்கிரீட் அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு முழுமையான தானியங்கி கட்டிட கட்டுமான தொழில்நுட்பம். இக்கட்டுமானத்தில் ரோபோவால் இயக்கப்படும் அச்சுப்பொறி கான்கிரீட்டை துல்லியமாக ஒன்றன் மேல் ஒன்றாக குவிக்கும்."

    "இதில் உபயோகப்படுத்தப்படும் கான்கிரீட் சிறப்பு வகையை சேர்ந்தது என்பதால் இது விரைவாக கடினத்தன்மையை அடைகிறது. வழக்கமான கட்டுமான முறையில் கட்டியிருந்தால் இது கட்டி முடிக்க சுமார் 6 முதல் 8 மாதங்களாகும். பழைய முறையோடு ஒப்பிடும்போது இந்த தொழில்நுட்பத்தில் முழு கட்டுமான பணிகளும் 45 நாட்களில் நிறைவடைந்தது. நேரத்தையும், செலவையும் குறைப்பதால் இந்த கட்டுமான தொழில்நுட்பம் வழக்கமான முறைக்கு ஒரு சரியான மாற்றாக அமையும். இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

    ×