என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3.65 crore spent at 80 cents"

    • அலுவலகத்திற்கு தனியாக புதிய கட்டிடம் கட்ட இந்து அறநிலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.
    • அலுவலகம் 18 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மண்டல இந்து அறநிலை துறை அலுவலகம் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் செயல்பட்டு வருகிறது . இந்த அலுவலகத்திற்கு தனியாக புதிய கட்டிடம் கட்ட இந்து அறநிலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து அலுவலகம் கட்டுவதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் பின்புறம் உள்ள குகை அம்பலவான சாமி கோவிலுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. 80 சென்ட் இடத்தில் 3.65 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார் .இதை ஒட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் ,பார்த்திபன் எம்.பி., ராஜேந்திரன், எம்.எல்.ஏ., இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். இந்த அலுவலகம் 18 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×