என் மலர்
நீங்கள் தேடியது "2nd level constable exam"
- திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்கள் 9741 பேர், பெண்கள் 2072 பேர் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 11814 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
- தேர்வு மையத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்புத்துறை காவலர் தேர்வு நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வு 6 மையங்களில் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 9741 பேர், பெண்கள் 2072 பேர் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 11814 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ, பார்வதீஸ், ஜி.டி.என், என்.பி.ஆர், எஸ்.எஸ்.எம் கல்லூரிகளிலும், அவர்லேடி பள்ளியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு நுழைவு சீட்டு பெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களது புகைப்படம் ஒட்டிய நுழைவுசீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் உரிய நேரத்தில் அடையாள அட்டையுடன் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.
கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை எழுதுபொருள் மற்றும் நுழைவுச்சீட்டு, எழுதுஅட்டை இவைகளை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. வேறு பொருட்கள் எடுத்துவரும் பட்சத்தில் மையத்திற்கு வெளியில் ஒப்படைத்துவிட்டு தேர்வு முடிந்து செல்லும்போது திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
தேர்தல் பார்வையாளர், தொழில்நுட்ப காவல்துறை தலைவர் பாபு மற்றும் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில் தேர்வுகள் நடைெபறும்.
தேர்வு மையத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.






