என் மலர்

  நீங்கள் தேடியது "207 case"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 207 வழக்குகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். #Thoothukudifiring
  தூத்துக்குடி:

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக 249 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதில் 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவுபடி மொத்தம் 207 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

  இந்நிலையில் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே உள்ள 5 வழக்கு தொடர்பாக திரட்டிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

  இதைத்தொடர்ந்து நேற்று 207 வழக்குகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். #Thoothukudifiring
  ×