என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2026 Bengal Assembly"

    • VVPAT-ல் வேட்பாளர்கள் முகம் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை.
    • மேற்குவங்கத்தில் தேர்தல் பணிகள் துவக்கம்

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மத்தியப் பிரதேசத்தில் SIR பணிகள் நடைபெற்று வரும்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பயிற்சி மற்றும் வாக்களிப்பு ஒத்திகைப் பயிற்சியை இன்று தொடங்கி உள்ளது.

    துணைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் பாரதி தலைமையில் கொல்கத்தாவில் முதல் நிலை சோதனை (FLC) குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் SIR, EVM இருப்பு, VVPAT இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில தேர்தல் ஆணையத்திடம் அனைத்து இயந்திரங்களின் இருப்பும் போதுமான அளவு உள்ளதாக தெரிவித்தது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த வகையான படங்கள் இடம்பெற வேண்டும் எனவும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். இம்முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது. VVPAT-ல் வேட்பாளர்கள் முகம் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை. 

    நடந்து முடிந்த பீகார் தேர்தலில் இருந்து இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. வாக்களிப்பு ஒத்திகை பயிற்சியின்போது இது அப்படி இருக்கும் என காட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பயிற்சி அனைத்து பொத்தான்களும் சரியாக வேலை செய்கிறதா; வாக்குச் சீட்டு-கட்டுப்பாட்டு அலகு சரியாக பதிலளிக்கிறதா; VVPAT காகிதமும், படமும் சரியாக வெளிவருகிறதா என்பதை உறுதிசெய்து சரிபார்க்கும் நோக்கம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.  

    ×