என் மலர்

  நீங்கள் தேடியது "2019 Triumph Speed Twin"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரையம்ப் போன்வில் சீரிஸ் புதிய மோட்டார்சைக்கிளாக 2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் அறிமுகம் செய்யப்பட்டது. #Triumph #speedtwin  2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. புது மோட்டார்சைக்கிள் டிரையம்ப் போன்வில் சீரிஸ் இன் புது மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. புதிய 2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிள் பிப்ரவரி 2019 வாக்கில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என தெரிகிறது.

  புது டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 1938 ஆண்டுகளில் பிரபலமாக இருந்த மோட்டார்சைக்கிள் பெயரை திரும்பப் பெற்று இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்கள் ட்வின்-சிலின்டர் மாடல்களுக்கு டிரென்ட்-செட்டராக இருந்தது. புது மோட்டார்சைக்கிள்கள் திரக்ஸ்டான் ஆர் மற்றும் டி120 மாடல்களின் ஒருங்கிணைந்த வடிவமாக பார்க்கப்படுகிறது.

  2019 ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிள் பழங்கால வடிவமைப்பில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. இன்டிகேட்டர்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ட்வின் சைலன்சர்கள், பெரிய ஃபியூயல் டேன்க், ஹெட்லேம்ப் ஹோல்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.  2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மாடலில் ரைடு-பை-வயர் தொழில்நுட்பம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ரெயின், ரோடு மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. 2019 ஸ்பீடு ட்வின் மாடலில் திரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டு இருந்த டேபுலார் சேசிஸ் கொண்டிருக்கிறது. 

  இதன் எடை 10 கிலோ வரை குறைவாக இருக்கிறது. புதிதாக மக்னீசியம் கேம் கவர்கள், அலுமினியம் ஸ்விங் ஆர்ம், ஆப்டிமைஸ் செய்யப்பட்ட என்ஜின் கவர்கள், புது கிளட்ச் அசெம்ப்ளி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

  2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மாடலில் 1200 சிசி ஸ்டிரெயிட் ட்வின் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 96 பி.ஹெச்.பி. பவர், 112 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜெட் பிளாக், சில்வர் ஐஸ்/ஸ்டாம் கிரே மற்றும் கோரோசி ரெட் / ஸ்டாம் கிரெ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. #Triumph #speedtwin
  ×