என் மலர்
நீங்கள் தேடியது "2019 Kawasaki Ninja 650"
கவாசகி நிறுவனத்தின் 2019 நின்ஜா 650 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் 2019 கவாசகி நின்ஜா 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2019 வேரியன்ட் மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கவாசகி விற்பனை மையங்களில் புதிய மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு இருக்கின்றன.
தற்சமயம் கவாசகி நின்ஜா 650 மூன்று வேரின்ட்கள்: புதிய 2019 மாடல், KRT எடிஷன் மற்றும் MY18 எடிஷன்களில் கிடைக்கிறது. 2018 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய நிறம் தவிர 2019 நின்ஜா 650 மாடலில் எவ்வித அம்சங்களும் மாற்றப்படவில்லை.
கவாசகி நின்ஜா 650 மாடல் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வோர் மற்றும் தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பைக் அப்ரைட் ரைடிங் போஸ்ட்யூர், குறைந்த உயரம் கொண்ட சீட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), எகனாமிக்கல் ரைடிங் இன்டிகேட்டர் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழழங்கப்பட்டுள்ளது.

2019 நின்ஜா 650 மாடலின் முன்புறம் 41மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் பேக்-லின்க் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மாற்றியமைக்கக்கூடி பிரீலோடு வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் பிரேக்கிங் முன்பக்கம் 300 மில்லிமீட்டர் டூயல் பெட்டல் டிஸ்க், பின்புறம் 220மில்லிமீட்டர் சிங்கிள் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2019 கவாசகி நின்ஜா 650 விலை ரூ.5.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் புதிய மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நாடு முழுக்க நடைபெற்று கொண்டிருக்கிறது.
"இந்திய சந்தையில் நான்கு மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறோம் இதில் நின்ஜா 650 மாடலும் அடங்கும். இங்கு நின்ஜா 650 மாடலின் அம்சங்கள் மற்றும் கவர்ச்சிகர விலை போன்ற காரணங்களால் தொடர்ந்து வரவேற்பு கிடைக்கிறது," என கவாசகி மோட்டார்ஸ் இந்திய நிர்வாக தலைவர் யுடாகா யமஷிடா தெரிவித்தார்.






