என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 youths arrested for ransacking woman's house"

    • 12 நாட்களாக தலை மறைவாக இருந்த நிலையில் பிடிபட்டனர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுக்கத்தூரில் கடந்த 29-ந் தேதி பள்ளி மாணவியை காதலிக்குமாறு வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தி வந்தார். இதனை மாணவியின் தந்தை தட்டி கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த வாலிபர், அவரின் நண்பர்கள் 4 பேருடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்களை கும்பல் தாக்கியுள்ளனர்.

    பின்னர் வீடு புகுந்து உள்ள இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து மாணவியின் தாயார் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நாலு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபர் உட்பட கும்பலை தேடி வந்தனர்.

    கடந்த 12 நாட்களாக தலை மறைவாக இருந்து வந்த நிலையில் 2 வாலிபர்களை நேற்று ஒடுக்கத்தூர் அருகே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×