என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 snakes caught"

    • எருமாபாளையம் நாராயண பிள்ளை காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • இந்த பகுதியில் உள்ள முட்புதருக்குள் நேற்று சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் எருமாபாளையம் நாராயண பிள்ளை காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள முட்புதருக்குள் நேற்று சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை நவீன கருவிகளின் உதவியுடன் பிடித்தனர். பின்னர் அதனை வனத்துறையினர் உதவியுடன், வனப்பகுதிகளில் கொண்டு சென்று விட்டனர்.

    இதேபோல் சேலம் வடக்கு அம்மாப்பேட்டை, சத்யா நகர் பகுதியில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சுமார் 4 அடி நீளமுள்ள கழுதை விரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    ×