என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 persond arrested"

    • போடி முந்தல் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • இறைச்சி மற்றும் காட்டு மாட்டை வேட்டையாடிய 2 பேரை கைதுசெய்தனர். மேலும் 2 துப்பாக்கிளை பறிமுதல் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி முந்தல் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அங்குள்ள மருத்துவர் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்தனர்.

    வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வேலை பார்த்த மாந்தோப்பு பகுதியில் சோதனை நடத்தினர்.

    அங்கு 150 கிலோ காட்டு மாட்டின் இறைச்சி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை வேட்டையாடி அதனை இறைச்சியாக விற்பனை செய்ய அவர்கள் வைத்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அவர்கள் இறைச்சி மற்றும் காட்டு மாடை வேட்டையாட பயன்படுத்திய 2 துப்பாக்கிளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் குரங்கணியைச் சேர்ந்த சன்னாசி (54), போடியைச் சேர்ந்த பெருமாள் (40) என தெரிய வரவே அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×