search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "194 centers"

    • தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
    • 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.

    இதில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி பணிகளில் மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 71 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்படுகிறது.

    ×