என் மலர்
நீங்கள் தேடியது "175 ADMK members arrested"
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- நீலகிரி மாவட்டம் முழுவதும் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
சென்னையில் அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரியிலும் சாலைமறியல் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஒன்றிய செயலாளர்கள் கடநாடுகுமார், பேரட்டிராஜி, நொண்டிமேடு கார்த்திக், ஒ.சி.எஸ்.ஜெயராமன், நகர மன்ற உறுப்பினர்கள் லயோலோ குமார், துர்காஜெயலட்சுமி, கிளை செயலாளர் பிரபுதுர்கா, சார்பணி செயலாளர்கள், கிளைகழக செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி பஸ் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சாந்திராமு தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் கோத்தகிரி மேற்கு ஒன்றியம் கம்பட்டிகுமார், கிழக்கு ஒன்றியம் தப்பகம்பை கிருஷ்ணன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர் பழையபஸ் நிலையத்தில் உ ள்ள காந்தி சிலை முன்பு அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனூப்கான் தலைமையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பந்தலூரில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேர், மஞ்சூரில் 15 பேர் மசினகுடியில் 11 பேர் உள்பட நீலகிரி மாவட்டம் முழுவதும் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.






