search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14 houses"

    • கொடைக்கானல் அருகே வாழைகிரியில் ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
    • ரூ.35 லட்சம் செலவில் 14 வீடுகள் கட்ட பூமி பூஜை போடப்பட்டது

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான சாலையை ஒட்டி மலை கிராமமான வாழைகிரி உள்ளது. இங்கு 14 ஆதிவாசி குடும்பத்தினருக்கு சுமார் ரூ.35 லட்சம் செலவில் புதிய வீடுகள் கட்டுவதற்காக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட நக்சலைட் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    கொடைக்கானல் கால்டன் நட்சத்திர விடுதி பொது மேலாளர் ராஜ்குமார் என்பவர் முயற்சியில் வாழைகிரி என்ற இடத்தில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் நக்சலைட் சிறப்பு பிரிவு அலுவலர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது.

    ×