search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14 arrest"

    கோவை அருகே நடந்த ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    திருச்சூர் கல்யாண் நகைக்கடையில் இருந்து கோவைக்கு கடந்த 7-ந் தேதி காரில் கொண்டு வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை நவக்கரை அருகே வழிமறித்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    இந்த வழக்கு தொடர்பாக வேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகிய 2 பேர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்த போது கொள்ளை கும்பல் பற்றிய முழு தகவல்கள்கள் தெரிய வந்தது.

    அதன்பேரில் திருச்சூரை சேர்ந்த ரெனூப்(வயது 34), கண்ணன்(38), எர்ணாகுளத்தை சேர்ந்த ஹபீப்(41), பத்தினம்திட்டாவை சேர்ந்த விபின் சங்கீத்(28) இடுக்கி ரின்சாத் சித்திக் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் ரெனூப் நகைக்கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இவருக்கு கடையில் இருந்து நகைகள் வெளியே கொண்டு செல்லப்படும் அனைத்து தகவல்களும் தெரியும். வேலை பறிபோன ஆத்திரத்தில் அவர் தனது நண்பர் ஹபீப்பிடம் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தை கூறி உள்ளார்.ஹபீப் தனது நண்பரான ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ்(23) என்பவரின் உதவியை நாடினார்.

    அவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாதிக் உசேன்(25), வேலூரை சேர்ந்த ரிஸ்வான் செரிப்(27), ஸ்ரீபெரும்புதூர் ராஜசேகரன் (33), சென்னை புளியந்தோப்பு அத்திக் பாஷா(25), பெங்களூரை சேர்ந்த மெகபூப்பாஷா (26), சென்னையை சேர்ந்த அப்துல் ரஹிம்(26) சையது ரஹிம், மற்றொரு பைரோஸ் மற்றும் சிலருடன் சேர்ந்து இந்த கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பைரோஸ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    கைதான பைரோசுக்கு செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. கொள்ளையடித்த நகைகளில் பெரும்பகுதியை இவர் தனது அண்ணன் அகமது சலீம், தாய் சமா ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அந்த நகைகளுடன் அகமது சலீம், சமா ஆகியோர் திருப்பதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய போது அங்குள்ள போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

    தற்போது ஆந்திர சிறையில் இருக்கும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களிடம் இருந்து கொள்ளை நகைகளை மீட்கவும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    நகை கடை கொள்ளையர்களை பிடித்த டி.எஸ்.பி. வேல்முருகன், இன்ஸ்பெக்டர் தூய மணி தலைமையிலான தனிப்படையினரை ஐ.ஜி. பெரியய்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் பாராட்டினார்கள். #tamilnews
    ×