என் மலர்
நீங்கள் தேடியது "13 year old girl"
மகாராஷ்டிராவில் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற விழாவில் நடனமாடிய 13 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #13yearoldgirldied
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் கந்திவலி பகுதியில் அரசு சார்பில் கலை மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில்
கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடனமாடிக் கொண்டிருந்த குழுவை சேர்ந்த 13 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அரசு ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடனமாடிய 13 வயது சிறுமி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #13yearoldgirldied






