search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11th Public Exam"

    • தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்வதிலும் அரசிடம் நிதி பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது
    • 11ஆம் வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தகவல்

    சென்னை:

    தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் துறைச் செயலாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

    இதில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித்துறையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. இதற்குரிய இடங்கள் இருந்தும், தேவையான நிதிகள் ஒதுக்கப்படாமல் உள்ளது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க வேண்டியுள்ளது.

    பள்ளிக்கல்வித் துறையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில், ஆண்டுதோறும் காலியாகும் இடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாத நிலைமை உள்ளது. இதற்காக தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்வதிலும் அரசிடம் நிதி பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், ஆசிரியர்களை நியமனம் செய்ய இயலாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன. 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×