என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 goats were sacrificed"

    • மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய நிலையில் பரிதாபம்
    • வருவாய்த் துறையினரும் தீவிர விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி காலனி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சத்யநாராயணன், சங்கர், சவுந்தர் இவர்களுக்கு சொந்தமான ஆடுகளை அருகில் உள்ள நிலம் மற்றும் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம்.

    நேற்று மாலை சத்யநாராயணா, சங்கர் மற்றும் சவுந்தர் ஆகியோர் அவர்களுடைய ஆடுகளை பட்டியிலிருந்து மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்துள்ளன. தண்ணீர் குடித்த பின் சுமார் ½ மணி நேரத்திற்குள் மேச்சலுக்கு சென்ற ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளது.

    ஆடுகள் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் அருண்காந்தி, ஜெயபால், வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×