என் மலர்

  நீங்கள் தேடியது "100 people arrest"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆவடி அருகே சாலையை சீரமைக்க கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நடத்திய சாலை மறியலையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
  திருநின்றவூர்:

  ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில் உள்ள குளக்கரை சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

  தினமும் 10-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் இந்த பள்ளங்களில் கீழே விழந்து காயமடைந்து வருகின்றனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியல் செய்தனர்.

  இதையடுத்து மறியலில் ஈடபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 6 மாதத்துக்கு முன்பு ஜல்லி கொட்டினர். ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். #tamilnews
  ×