என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "000 laptop"

    பெருந்துறையில் பிளாஸ்டிக் கதவு விற்பனை கடையில் லேப்டாப், ரூ.35 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்
    ஈரோடு:

    பெருந்துறையில் பிளாஸ்டிக் கதவு விற்பனை கடையில் லேப்டாப், ரூ.35 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை திருநகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(39). இவர். பெருந்துறையில் பவானி சாலையில் பிளாஸ்டிக்(பிவிசி) கதவு, ஜன்னல் விற்பனை கடை நடத்தி வருகிறார். வெங்கடே–ஸ்வரன் சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்து, கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். 

    மறுநாள் ஞாயிறுக்கிழமை விடுமுறை விட்டிருந்தார். இதையடுத்து அடுத்த நாள்  காலை வெங்கடேஸ்வரன் கடையை திறந்துள்ளார். அப்போது, கடையின் கல்லா பெட்டி உடைக்கப்பட்டு ரூ.35 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த லேப்டாப் போன்றவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பதை அறிந்தார். 

    மேலும் அந்த மர்ம–நபர்கடையின் பின்புற கதவு வழியாக உள்ளே வந்து, சி.சி.டி.வி கேமராக்களின் ஓயர்களை துண்டித்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டி ருப்பது உறுதி செய்தார். 

    இதுகுறித்து வெங்கடே ஸ்வரன் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை டுத்து சுந்தரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.
    ×