என் மலர்
நீங்கள் தேடியது "000 bribe for soil"
தருமபுரி அருகே மண் அள்ள லஞ்சம் வாங்குவதாக பெண் அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள பெரியம்பட்டியை சேர்ந்தவர் பெரிச்சி . இவர் பல்வேறு பணிகளுக்காக அப்பகுதியில் மண் எடுத்து விற்று வருகிறார்.
இவ்வாறு மண் எடுப்பதற்காக பெரிச்சி காரிமங்கலம் தாலுகா அலுவலக அதிகாரிகளுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரிச்சி மண் எடுத்துக்கொண்டு வந்த போது தாலுகா அலுவலக அதிகாரிகள் வாகனத்துடன் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள பெரிச்சி, தாலுகா அலுவலக பெண் அதிகாரி ஒருவர் மீது லஞ்ச குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






