search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traders struggle"

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள ஜவுளி சந்தை தினசரி கடை அடைக்கப்பட்டு இருந்தது.
    • பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    ஈரோடு:

    சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் கொண்டு வந்துள்ள செக்சன் 43 பி (எச்) மாற்றமானது வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி அமலாகிறது.

    இதன்படி தங்கள் இருப்பு நிலை குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால் அவை வருமானமாக கருதப்படும். அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஜவுளி சார்ந்த தொழிலில் துணிகளை கொள்முதல் செய்து பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஸ்டிச்சிங் என்ன பல நிலைகளை கடந்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    அதற்கு ஏற்ப 45 நாட்களுக்குள் அல்லது அதற்கு மேலான நாட்களின் கடன் தொகையை நேர் செய்வார்கள். தற்போதைய புதிய சட்ட திருத்தத்தால் அந்த தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் இத்தொழில் கடுமையாக பாதிப்படையும்.

    இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் ஜவுளி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.


    அதன்படி இன்று ஈரோட்டில் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவெங்கடாச்சாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு போன்ற பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் மற்றும் அதனை சார்ந்த குடோன்கள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் முன்பு வேலை நிறுத்தத்திற்கான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் காரணமாக சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஜவுளி வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு, பவானி, சித்தோடு, பி.பி.அக்ரஹாரம், பள்ளிபாளையம் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று ஒரு நாள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்களது உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று ஒரு லட்சம் விசைத்தறியாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஜவுளி வணிகர்களின் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையும் இன்று அடைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள ஜவுளி சந்தை தினசரி கடை அடைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான பேனரும் கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்தது. ஜவுளி வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    • ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
    • இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் போஸ் மைதானத்தில் தற்காலிக வ.உ.சி. பூ மார்க்கெட் இயங்கி வந்தது. இதற்காக தற்காலிக ஷெட் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.

    தற்காலிக கடைகள்

    இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    இதற்கு பூ மார்க்கெட் வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறு வழி இல்லாமல் அங்கேயே கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வியாபாரம் பாதிப்பு

    காலை மற்றும் மாலை நேரங்களில் வளாகத்திற்குள் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பூக்கடைகளும் இருப்பதால் வாடிக்கையாளர் தங்கள் கடைக்கு வருவது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் கடை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உடனடியாக பூக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தர்ணா போராட்டம்

    ஆனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் வணிக வளாக வியாபாரிகள் கடையை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து வணிக வளாக வியாபாரிகள் இன்று வணிக வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலம் மாநகராட்சி வணிக வளாகப் பகுதியில் பூக்கடைகள் வைக்க அனுமதி அளித்ததால் தங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

    வாடிக்கையாளர் குறைவு

    இது குறித்து சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. மாநகராட்சி வணிக வளாகமும், பூ மார்க்கெட்டும் ஒரு இடத்தில் செயல்படுவதால் வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வணிக வளாகத்தில் உள்ள பூக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வணிக வளாகத்தை காலி செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.

    பேச்சுவார்த்தை

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பூ மார்க்கெடடை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுவரையில் பொறுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சில் உடன்படாத வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இ-நாம் திட்ட செயலில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்
    • கொள்முதல் நிலையம் ெவறிச்சோடியது

    வந்தவாசி:

    விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்களுக்கான கட்டுப்படியான விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு இ நாம் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தில் பதிவு பெற்ற வியாபாரிகள் இந்த திட்ட செயலி மூலமே நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய இயலும். இந்த செயலியில் எந்த வியாபாரி ஏலம் அதிக மாக நிர்ணயம் செய்கிறாரோ அவருக்கே அதற்கான விளை பொருட்கள் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் வந்த வாசி ஒழுங்குமுறை விற்பனை கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன் இணைக்கப்பட்டு, இந்தசெயலிமூலம் வேளாண் விளைபொருட் கள் கொள்முதல் நடந்து வரு கிறது.

    இந்த நிலையில் இந்ததிட்ட செயலியில் சில திருத்தங் களை செய்யக்கோரி வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நேற்று நெல் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    முன்னர் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட் டைகளுக்கு நாங்கள் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்த பின்னர், அந்த நெல்லை எங்கள் கோணிப் பைகளுக்கு மாற்றுவோம். அப்போது தரம் இல்லாத நெல் கலப்படம் செய்யப் பட்டு இருந்தால் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட விவசாயியை அழைத்து பேசி தீர்வு காண்போம்.

    ஆனால் இப்போது இந்த செயலி மூலம் கொள்முதல் நடைபெறும் போது இது போன்று பேசி தீர்வு காண் பது இயலாததாகவே தோன்றுகிறது. எனவே விவசாயிகள் கொண்டு வரும் விளைபொ ருட்களுக்கு நாங்கள் விலை நிர்ணயம் செய்யும் முன்னர், இந்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகமே வேறு கோணிப் பையில் மாற்றி கலப்படம் இருந்தால் கண்டறிய வேண்டும்.

    மேலும் விளைபொருட்களுக்கான விலையை நாங்கள் இந்த செயலியில் பதிவு செய்யும் போது தவறுதலாக அதிக தொகை குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டால் எங்களால் அதை மாற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு நஷ்டமே ஏற்படும். எனவே, வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்து இந்த செயலியில் உரிய திருத் தங்கள் செய்யக்கோரி நெல் கொள்முதலை நிறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பரமேஸ்வரி கூறியதாவது:-

    விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விளை பொருட்களை எடுத்து வந்தவுடன் அவற்றின் ஈரத் தன்மை, தரம் ஆகியவற்றை நாங்களே பரிசோதனை செய்து இ-நாம் செயலில் பதி வேற்றிவிடுவோம்.

    குற்றவியல் நடவடிக்கை இந்த செயலி மூலம் நாட் டின் எந்த மூலையில் இருந் தும் வியாபாரிகள் வீட்டில் இருந்தபடியே எந்த ஒரு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருந்தும் விளை பொருட்களை கொள்முதல் செய்ய இயலும்.

    விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களில் கலப்படம் கண்டறியப்பட்டால் அதற்கான ஏலம் ரத்து செய்யப்படும். மேலும் கலப்பட பொருட் கள் எடுத்து வரும் விவசாயி கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வியாபாரிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்த விவசாயிகள் விளைபொருட் களை கொண்டு வராததால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ×