என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் 9.5 பவுன் நகை திருட்டு"
- கோவில் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் 9.5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
- பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
திருச்சி:
மண்ணச்சநல்லூர் அருேக அமைந்துள்ள உத்தமர் கோவில் நேற்று முன்தினம் திருத்தேேராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் நெம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 62) என்பவரிடம்
8 பவுன் தாலிச் சங்கிலி, பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி(70) என்பவரிடம் ஒன்றரை பவுன் தங்க சங்கிலி என மொத்தம் ஒன்பதரை பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இருவரும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழங்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






